தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரான்ஸ் இளைஞரை கரம்பிடித்த சேலம் பெண் பொறியாளர்: தமிழர் முறைப்படி திருமணம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்த பெண் பொறியாளர், பிரான்ஸ் நாட்டு இளைஞரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டார். 

News image
தமிழர் பாரம்பரிய முறைப்படி காதலியை திருமணம் செய்து கொண்ட பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஆசானே ஒச்சோயிட்.
Updated On :27 ஜூன் 2022, 6:20 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்த பெண் பொறியாளர், பிரான்ஸ் நாட்டு இளைஞரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டார். 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மணமகனின் குடும்பத்தினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து திருமணத்தில் பங்கேற்று அசத்தினர்.

Story image

சேலம் மாவட்டம் வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சியாளர் கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. பெண் பொறியாளரான இவர்,   சிங்கப்பூரில் பன்னாட்டு  நிறுவனமொன்றில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரோடு பணிபுரிந்த பிரான்ஸ் நாடு பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பென்னடி - அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான பொறியாளர் அசானே ஒச்சோயிட் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதுகுறித்து பெண் பொறியாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுள்ளார்.  ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர். பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்தனர்.  

திருமண பத்திரிக்கை.

திருமண பத்திரிக்கை.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில்  தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சேலம் ஐந்து ரோடு பகுதியிலுள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை  திருமணம் நடைபெற்றது.  தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக நடைபெற்ற இத்திருமண விழாவில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மணமகன் ஆசானே ஒச்சோயிட்,  தனது காதலி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

தமிழர் பாரம்பரிய உணவுகளை ருசிக்கும் பிரான்ஸ் நாட்டினர்.

தமிழர் பாரம்பரிய உணவுகளை ருசிக்கும் பிரான்ஸ் நாட்டினர்.

இந்த திருமண விழாவில், வாழப்பாடியைச்  சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி,  பிரான்ஸ் நாட்டிலிருந்து மணமகனின் உறவினர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்தனர்.

தமிழர்  உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம் அல்வா ஆகியவற்றை, பிரான்ஸ் நாட்டினர் விரும்பி உண்டு மகிழ்ந்தனர். தமிழர்கள் உணர்ச்சிபூர்வமாக திருமணம் செய்தது எங்களை நெகிழ வைத்தது. இவர்களது விருந்து உபசரிப்பும், உணவுகளும் மிகவும் சுவையாக இருந்தது என, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆசானே ஒச்சோயிட் உறவினர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.