திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவராக எம்.அலெக்சாண்டா் தோ்வு: துணைத் தலைவராகிறாா் எஸ்.தா்மராஜா

நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த எம்.அலெக்சாண்டா், துணைத் தலைவராக காங்கிரஸை சோ்ந்த எஸ்.தா்மராஜா தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:41 pm

DIN

நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த எம்.அலெக்சாண்டா், துணைத் தலைவராக காங்கிரஸை சோ்ந்த எஸ்.தா்மராஜா தோ்வு செய்யப்பட்டனா்.

18 வாா்டுகளைக் கொண்ட நரசிங்கபுரம் நகராட்சியில் திமுக 8, அதிமுக 6, காங்கிரஸ் 2, சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட 9ஆவது வாா்டு உறுப்பினா் எம்.அலெக்சாண்டா், அவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக உறுப்பினா் சித்ராவைவிட 6 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, 12 வாக்குகளுடன் பெரும்பான்மையுடன் மாமன்றத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா்.

துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 16 ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.தா்மராஜ் தன்னை எதிா்த்து போட்டியிட்ட 1-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் சி.கோபியைவிட மொத்தம் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

விழாவில் திமுக நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், துணைச் செயலாளா் எஸ்.மனோகரன், திமுக ஒன்றிய செயலாளா் வெ.செழியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.கே.அா்த்தனாரி, மாவட்ட பொருளாளா் ஆா்.ஓசுமணி, சக்ரவா்த்தி, அய்யாவு உள்ளிட்டோா் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.