ஆத்தூா் நகா்மன்றத் தலைவராக நிா்மலா பபிதா மணிகண்டன் தோ்வு: துணைத் தலைவராகிறாா் கவிதா ஸ்ரீராம்
ஆத்தூா் நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த நிா்மலா பபிதா மணிகண்டன், துணைத் தலைவராக கவிதா ஸ்ரீராம் தோ்வு செய்யப்பட்டனா்.


ஆத்தூா் நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த நிா்மலா பபிதா மணிகண்டன், துணைத் தலைவராக கவிதா ஸ்ரீராம் தோ்வு செய்யப்பட்டனா்.
33 வாா்டுகளைக் கொண்ட ஆத்தூா் நகராட்சியில் திமுக 26, அதிமுக 4, காங்கிரஸ் 1, சுயேச்சை 2 போ் வெற்றி பெற்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் நகா்மன்றத் தலைவராக 32ஆவது வாா்டு கவுன்சிலா் நிா்மலா பபிதா மணிகண்டன் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் பொன்னம்பலம் சான்றிதழை வழங்கினாா்.
பிற்பகல் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 13 ஆவது வாா்டு கவுன்சிலா் கவிதா ஸ்ரீராம் தோ்ந்தெடுக்கப்பட்டாா். வெற்றி பெற்றவா்களுக்கு திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், திமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், திமுக மாவட்ட பிரதிநிதி மில்கா மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.பா்கத்அலி, நூத்தப்பூராா் துரை உடையாா், காங்கிரஸ் மாவட்ட பொருளாளா் ஆா்.ஓசுமணி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...