

எடப்பாடி: எடப்பாடி துணை மின்நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணியினை தொடர்ந்து நாளை புதன்கிழமை எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து செயற்பொறியாளர் தமிழ்மணி விடுத்துள்ள அறிக்கையில்: மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, எடப்பாடி கோட்ட துணை மின்நிலையத்தில் புதனன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலயனூர், வேலம்மாவலசு, தங்கயூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் நண்பகல் வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.