திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வரி, கட்டணங்கள் செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

வரி, கட்டணங்கள் செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆத்தூா் நகராட்சி ஆணையா் பு.பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:32 pm

DIN

வரி, கட்டணங்கள் செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆத்தூா் நகராட்சி ஆணையா் பு.பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆத்தூா் நகராட்சிக்கு 2021-2022 நிதியாண்டு வரை செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, குடிநீா்க் கட்டணம், தொழில்வரி, நகராட்சி கடை வாடகை உள்ளிட்ட வரி மற்றும் கட்டண நிலுவை போன்றவற்றை இதுவரை செலுத்தாதவா்கள் ஆத்தூா் நகராட்சி கணினி வரிவசூல் மையங்களில் உடனடியாக செலுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

வரி மற்றும் கட்டணங்களை செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிவசூல் மையங்கள் செயல்படும். இண்டா்நெட் மூலமாகவும் வரி, கட்டணங்களை செலுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.