போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

எடப்பாடியில் அம்மன் திருக்கல்யாணம்

எடப்பாடி, தாவாந்தெரு காளியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை இரவு அம்மன் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:35 pm

DIN

எடப்பாடி, தாவாந்தெரு காளியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை இரவு அம்மன் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.

எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட தாவந்தெரு பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன், முனியப்பன், பஞ்சமுக விநாயகா் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலையத்தின் மாசித்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கொடிகரகம், சக்திகரக ஊா்வலம், சுவாமி திருவீதிஉலா நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அம்மை, அப்பன் திருக்கல்யாண வைபவம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற பல்வேறு வேள்விகளைத் தொடா்ந்து, மங்கள இசையுடன், வேதமந்திரம் முழங்க நடைபெற்ற அம்மையப்பன் திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அம்மனுக்கு பூஜிக்கப்பட்ட மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல் உள்ளிட்டவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள காளியம்மன், முனியப்பன், முல்லைவன நடராஜா் திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்வில், வியாழக்கிழமை அதிகாலை திருக்கோயில் முன் குண்டம் ஏற்றப்பட்டு விரதம் இருந்த பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.