எடப்பாடி அருகே தண்டனைக்கு பயந்து கூலி தொழிலாளி தற்கொலை

எடப்பாடி அருகே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கட்டிட தொழிலாளி, தண்டனைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

எடப்பாடி: எடப்பாடி அருகே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கட்டிட தொழிலாளி, தண்டனைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாண்டி வலசு,  பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (25), கட்டிட தொழிலாளியான இவர் ஈரோடு பகுதியில் கட்டிட சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். 

இந்நிலையில் ஈரோடு மாநகர், சூரம்பட்டிவலசு பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மகள் காவியா என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாகவும், திருமணம வயதை எட்டாத காவியாவை சதீஷ்குமார் சட்டவிரோதமாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததாக காவியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சூரம்பட்டி வலவு காவல்துறையினர் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இவ்வழக்கு குறித்த விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த வாரம் வழக்கு விசாரணைக்காக ஈரோடு சென்று திரும்பிய சதீஷ்குமார், குடும்பத்தாரிடம் வழக்கின் தீர்ப்பு தமக்கு சாதகமாக இருக்காது என்றும் இவ்வழக்கில் தனக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி வருத்தப் பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று சதீஷ்குமார் விவசாய பயன்பாட்டிற்கான பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை அறிந்து அவரை மீட்ட குடும்பத்தினர் சதீஷ்குமாருக்கு எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து எடப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்டனைக்கு பயந்து கட்டிட தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com