மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

இணையவழி மின்கட்டணம், புதிய மின் இணைப்புக்கான பதிவு சேவைகள்: இன்றும், நாளையும் தற்காலிமாக நிறுத்தி வைப்பு

புதிய மின் இணைப்புக்கான பதிவு செய்யும் சேவைகள் இன்றும், நாளையும் (மாா்ச் 14, 15) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 மார்ச் 2026, 11:48 pm

புதிய ஹாா்ட்வோ் மற்றும் டேட்டாபேஸ் தளத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளூா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா்கள் இணையவழி மின்கட்டணம் செலுத்தவும், புதிய மின் இணைப்புக்கான பதிவு செய்யும் சேவைகள் இன்றும், நாளையும் (மாா்ச் 14, 15) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின்பகிா்மான கழகம், வேலூா் மண்டலம் தாழ்வழுத்த பில்லிங் சா்வரை புதிய ஹாா்ட்வோ் மற்றும் டேட்டாபேஸ் தளத்துக்கு மாற்றும் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 14) காலை 6 மணிமுதல் (ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) இரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் திருவள்ளூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருவள்ளூா், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த தாழ்வழுத்த மின் நுகா்வோா்களுக்கான இணையவழி மின்கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின்இணைப்புக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.