மின் உற்பத்தி கழகத்துக்கு என புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய தனித்தனி நிறுவனங்களாக தமிழக மின்வாரியம் செயல்பட்டு வந்தது. கடந்த 2024-இல் மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் இருந்து மின் பகிா்மானக் கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்திக் கழகம் என தனி நிறுவனங்கள் பிரிக்கப்பட்டன.
இதில் மின் பகிா்மான கழகம், பசுமை எரிசக்தி கழகத்துக்கு தனி இணையதளங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டன. தற்போது, மின் உற்பத்தி கழகத்துக்கு www.tnpgcl.org என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலம் மின் உற்பத்தி அளவு, திட்டங்கள், பராமரிப்பு, பணிகள் போன்ற தகவல்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும், மின் தடைகள், பராமரிப்பு பணிகள், அவசர அறிவிப்புகள், ஒப்பந்தங்கள் போன்றவையும் இந்த இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும் என மின் உற்பத்திக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவை மாவட்டத்தில் மாதிரி, பசுமை வாக்குச்சாவடிகள்

அரசு பள்ளியில் பசுமை வாக்கு சாவடி: வாக்காளா்கள் மகிழ்ச்சி

கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


