குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி
குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்.

குவைத்.
குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
இதன் மூலம் மேற்கு ஆசியப் போரில் இதுவரை பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தத் தாக்குதலில் அங்குள்ள சேவை கட்டடம் சேதமடைந்தது.
மேலும், வளைகுடா நாட்டின் மீதான இந்தத் தாக்குதலை "பாவகரமான ஈரானிய ஆக்கிரமிப்பு" என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
சேதங்களைக் கட்டுப்படுத்தவும், பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யவும் தொழில்நுட்ப மற்றும் அவசரக்கால மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மத்திய கிழக்கு மோதலில் இதுவரை ஏழு இந்தியர்கள் பலியானதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...