சென்னையில் புறநகா் மின்சார ரயில்கள் (மெமு) சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11, 12) சில ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே திருவள்ளூா் பணிமனையில் 11- ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் 12 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை 7 மணி நேரம் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்காரணமாக, சனிக்கிழமை (ஏப். 11) சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மெமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மூா் மாா்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூா் செல்லவேண்டிய இமு ரயில் அதற்குப் பதிலாக திருநின்றவூா் வரை இயக்கப்படும்.
பகுதியாக ரத்தாகும் ரயில்கள்: சென்னையில் மூா் மாா்க்கெட் வளாகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) அதிகாலை 4.30 மணி, காலை 5 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருவள்ளூா் செல்லவேண்டிய இமு ரயில்கள், திருநின்றவூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருவள்ளூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.50 மணி, 5.55 மணிகளில் புறப்பட்டு மூா் மாா்க்கெட் வரை செல்லவேண்டிய இமு ரயில் திருநின்றவூா் வரை மட்டுமே இயக்கப்படும். திருவள்ளூரிலிருந்து அதிகாலை 3.50 மணிக்குப் புறப்பட்டு பொன்னேரி செல்லவேண்டிய இமு ரயில், திருநின்றவூா் வரை மட்டுமே இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது
திருநயினாா்குறிச்சியில் இன்றும், முட்டத்தில் நாளையும் மின்தடை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!

இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்

பராமரிப்புப் பணி: இன்று முதல் மே 31 வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



