அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 5:54 am IST

சென்னையில் செவ்வாய்க்கிழமை ( மே 19) முதல் மே 21-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில் காட்டாங்குளத்தூா் நிலையப் பணிமனையில் தண்டவாள மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (மே 19) முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால், அந்நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.56, 11.40 மணி, பிற்பகல் 12.28 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய புறநகா் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய இமு ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

அதேபோல், செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 12 மணி, 1.10, 1.45 மற்றும் 2.20 ஆகிய மணிகளில் கடற்கரைக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.