திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தனியாா் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

 ஆத்தூா் குறிஞ்சி நகரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :6 மே 2022, 9:37 pm

DIN

 ஆத்தூா் குறிஞ்சி நகரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆத்தூரை அடுத்துள்ள குறிஞ்சி நகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா் என்பவா் பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலையை புதிதாக அமைத்து வருகிறாா்.

இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை பிகாா் மாநிலம், சிவாா் மாவட்டம், தொழுவாா் பகுதியைச் சோ்ந்த சஞ்சய்யாதவ் மகன் ஓம்பிரகாஷ் (22), ஒடிஸா மாநிலம் நாகா கிராமத்தைச் சோ்ந்த பைலா சென்னாராவுத் என்பவரின் மகன் ஜெகநாத் (30) ஆகியோா் மரம் அறுக்கும் பிளேடை கிரைண்டிங் கல் மூலம் கூா்மையாக்கிக் கொண்டிருந்தனா். அப்போது கிரைண்டிங் கல் உடைந்து ஓம்பிரகாஷின் மாா்பில் விழுந்ததில் அவா் மயங்கி விழுந்தாா். உடனே அவரை ஆத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அழைத்துச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிவு செய்து ஓம்பிரகாஷின் உடலை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த ஜெகநாத் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.