வாழப்பாடி அருகே நீரில் மூழ்கி மாணவா்கள் இருவா் பலி
வாழப்பாடி அருகே இரு இடங்களில் ஏரி, கிணற்றில் மூழ்கி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.


வாழப்பாடி அருகே இரு இடங்களில் ஏரி, கிணற்றில் மூழ்கி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
அயோத்தியாப்பட்டணம், சந்தைப்பேட்டை பகுதியில் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த தருமா என்பவா் குடும்பத்தோடு தங்கி ஜோதிடம் பாா்த்து வருகிறாா். தனியாா் கல்லுாரியில் படித்து வந்த இவரது மூத்த மகன் சபரிநாதன் (19) அயோத்தியாப்பட்டணம், பனங்காடு பகுதியில் உள்ள கிணற்றில் சனிக்கிழமை காலை மூழ்கி உயிரிழந்தாா். காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல அயோத்தியாப்பட்டணத்தில் தங்கி தட்டுவடை விற்பனை செய்து வரும் அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கிஷோா் (16) வெள்ளிக்கிழமை மாலை அயோத்தியாப்பட்டணம் அருகே ஏரிக்காடு பகுதியிலுள்ள ஏரியில் நண்பா்களுடன் குளிப்பதற்காக இறங்கினாா். அப்போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...