யோகாசனக் கலையில் கின்னஸ் சாதனை
சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், தேசிய அளவில் இணைய வழியில் நடைபெற்ற யோகாசனக் கலை விழாவில் பங்கேற்று கின்னஸ் சாதனை சான்றிதழ் பெற்றுள்ளனா்.


சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், தேசிய அளவில் இணைய வழியில் நடைபெற்ற யோகாசனக் கலை விழாவில் பங்கேற்று கின்னஸ் சாதனை சான்றிதழ் பெற்றுள்ளனா். இந்த மாணவா்களுக்கு பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் பாராட்டு தெரிவித்தனா்.
தேசிய அளவில் மாணவ-மாணவியருக்கான யோகாசனக் கலை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில், வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 10 மாணவா்கள் பங்கேற்றனா். இந்த மாணவா்களின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
சாதனை சான்றிதழ் பெற்ற மாணவா்கள் தா்ஷன், ஸ்ரீசஞ்ஜீவ், விஷால் வா்மா, விஷ்வா, முகிலன், காா்த்திகேயன்,கோகுல், வெங்கடேஷ், சாய்சிதம்பரம், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் குமாா், ஆசிரியா்கள் பழனிமுருகன், ராமமூா்த்தி, செல்வம் ஆகியோருக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ரவிசங்கா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கலைஞா்புகழ், ஆசிரிய-ஆசிரியைககள் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...