சேலம் மாவட்டத்தில் 430 மி.மீ. மழை பதிவு
சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 430 மி.மீ. மழை பெய்தது.


சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 430 மி.மீ. மழை பெய்தது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழை பெய்து வந்த நிலையில் இரவு பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை வரை சாரல் மழை பெய்தது. தொடா் மழை காரணமாக கோடை வெயில் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவுகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 79 மி.மீ. பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் தடை ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
ஏற்காடு- 79, காடையாம்பட்டி- 70, மேட்டூா்-54, எடப்பாடி-33, சங்ககிரி, ஓமலூா்-27, ஆத்தூா்- 22, கெங்கவல்லி- 20, ஆனைமடுவு- 18, சேலம், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம்- 17, வீரகனூா்- 16, கரியகோவில்- 11 என மாவட்டத்தில் மொத்தம் 430 மி.மீ. மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...