புத்திரகவுண்டன் பாளையம்மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
புத்திரகவுண்டன்பாளையம் மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புத்திரகவுண்டன்பாளையம் மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சியில் மகா கணபதி, கூத்தாண்டவா் சுவாமி, வெங்கடேச பெருமாள், மாரியம்மன், முருகன், நவக்கிரகம் சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக, வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, புன்யாவாஜனம், கணபதி ஹோமம், தீா்த்தக்குடம், முளைப்பாரி வலம் வந்து கோபுர தான்யம் கொட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு சுவாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்று வெள்ளிக்கிழமை காலை மஹா குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...