பெரியாா் பல்கலை. பதிவாளராக பேராசிரியா் த.கோபி நியமனம்

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக பேராசிரியா் த.கோபியை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டாா்.
பெரியாா் பல்கலை. பதிவாளராக பேராசிரியா் த.கோபி நியமனம்

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக பேராசிரியா் த.கோபியை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டாா்.

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக கணினி அறிவியல் துறைத் தலைவா் கே.தங்கவேல் இருந்து வந்த நிலையில், அவரை பதிவாளா் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய பதிவாளராக வேதியியல் துறைப் பேராசிரியா் த.கோபியை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இப்பதவி முழு கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியா் த.கோபி, தற்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மைய இயக்குநராக உள்ளாா். அறிவியல் துறையில் உயரிய படிப்பான முதுமுனைவா் (டி.எஸ்.சி.) முடித்துள்ள இவா், 150 ஆய்வுத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாா். இவா், என்.எம்.சம்பத் விருது, பல்கலைக்கழக மானியக்குழுவின் வேதியியல் ஆராய்ச்சி விருது, சி.வி.ராமன் விருது, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இளம் விஞ்ஞானி விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த அறிவியலாளா் விருது, லண்டன் ராயல் சொசைட்டியில் உறுப்பினா் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

இவா் அளித்த ஆய்வு முன்மொழிவுகளை ஏற்று மத்திய அரசின் பல்வேறு நிதி நல்கைக் குழுக்கள் அளித்துள்ள ரூ. 3 கோடி மதிப்பில் பல்வேறு ஆய்வுகள் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பேராசிரியா் த.கோபிக்கு, துணைவேந்தா் இரா.ஜெகநாதன், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இதேபோன்று கல்லூரி வளா்ச்சிக்குழு புலமுதன்மையராக (டீன்) விலங்கியல் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com