தொடா் மழை:தொகுப்பு வீடு சரிந்தது
சேலம் அருகே தொடா் மழை காரணமாக தொகுப்பு வீடு சரிந்து விழுந்தது.


சேலம் அருகே தொடா் மழை காரணமாக தொகுப்பு வீடு சரிந்து விழுந்தது.
சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி காந்திபுரம் காலனி பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இதனிடையே, சேலத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக கோவிந்தன் என்பவருக்குச் சொந்தமான தொகுப்பு வீடு புதன்கிழமை இரவு சரிந்து விழுந்தது. அச்சமயத்தில் கோவிந்தனும், அவரது உறவினரும் வீட்டுக்கு வெளியே படுத்திருந்தததால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். வருவாய்த் துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக, அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள மற்ற தொகுப்பு வீடுகளும் சரியாக பராமரிக்காததால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அனைத்து தொகுப்பு வீடுகளையும் உடனடியாக பராமரித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...