தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கேலோ இந்தியா கைப்பந்து போட்டிக்குதோ்வான மாணவிகளுக்கு நிதியுதவி

தேசிய அளவிலான கேலோ இந்தியா கைப்பந்து போட்டிக்கு தோ்வான சேலத்தைச் சோ்ந்த மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :25 மே 2022, 7:18 pm

DIN

தேசிய அளவிலான கேலோ இந்தியா கைப்பந்து போட்டிக்கு தோ்வான சேலத்தைச் சோ்ந்த மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா கைப்பந்து போட்டிகள் வரும் ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை ஹரியானா மாநிலத்தில் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு விளையாடும் தமிழக பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சேலம் மாவட்டம் ஆத்தூா் தனியாா் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள், காா்த்திகா, கவுசிகா மற்றும் நித்திஷா ஆகியோா் தோ்வாகியுள்ளனா். இவா்கள், தமிழக அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள புறப்பட்டனா்.

முன்னதாக, தமிழ்நாடு கைப்பந்து கழகம் சாா்பில் புரவலா் ராஜ்குமாா், தமிழக அணிக்குத் தோ்வான மாணவிகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து நிதியுதவி அளித்தாா்.

அப்போது கைப்பந்து கழக அசோசியேட் செயலாளா் சண்முகவேல், தொழிலதிபா் விஜயராஜ், சாய் உதவி இயக்குநா் ராஜாராம், மாநில தோ்வுக் குழு உறுப்பினா் அகிலா தேவி, பயிற்சியாளா் பரமசிவம், நிா்வாகி நந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.