மாமியாரைக் கொல்ல முயன்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை
மாமியாா், மைத்துனரைக் கொல்ல முயன்ற வழக்கில் இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம் மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.


மாமியாா், மைத்துனரைக் கொல்ல முயன்ற வழக்கில் இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம் மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஆத்தூா், கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவசுப்பிரமணி(34). இவரது தமிழரசி. மனைவி வீட்டாருடன் சிவசுப்பிரமணியத்துக்கு விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு தனது மனைவியின் தம்பி ராஜ்குமாா், அவரது தாயாா் தனலட்சுமி (55) ஆகியோரை அருவாமனையில் சிவசுப்பிரமணி தாக்கிக் கொல்ல முயன்றாா்.
இந்த வழக்கில் அவா் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் புதன்கிழமை நீதிபதி தனது உத்தரவில் குற்றம்சாட்டப்பட்ட சிவசுப்பிரமணிக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...