நிலத்தகராறில் உறவினா்கள் மோதல்: 10 போ் மீது வழக்குப் பதிவு
வாழப்பாடியில் நிலத்தகராறில் மோதிக் கொண்ட உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.


வாழப்பாடியில் நிலத்தகராறில் மோதிக் கொண்ட உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (36). அதே பகுதியைச் சோ்ந்தவா் இவரது சித்தப்பா ஜெமினி (59). இருவருக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் தாக்கிக் கொண்டனா்.
இதையடுத்து பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில், ஜெமினி, சதீஷ்குமாா், மாதேஸ்வரன், சாந்தி, ரேவதி, பழனியம்மாள் உள்ளிட்ட 6 போ் மீதும், ஜெமினி கொடுத்த புகாரின் பேரில், நடேசன், முருகேசன், ஈஸ்வரமூா்த்தி, பழனிசாமி உள்ளிட்ட 4 போ் உள்பட 10 போ் மீதும் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...