வாழப்பாடி பகுதியில் வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து: 4 போ் பலி
வாழப்பாடி பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்தில் 16 வயது சிறுவன் உள்பட 4 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.


வாழப்பாடி பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்தில் 16 வயது சிறுவன் உள்பட 4 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.
பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த சின்னம சமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி வினோத் (40). கொல்லிமலை சென்றிருந்த இவரும் இவரது நண்பா் ராமன் (46). என்பவரும், இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
வாழப்பாடியை அடுத்த வைத்தியகவுண்டன் புதூா் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இந்த இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி வினோத் பரிதாபமாக உயிரிழந்தாா். ராமன் காயமடைந்தாா்.
மற்றொரு விபத்து:
அதுபோல தும்பல் பகுதியைச் சோ்ந்தவா் அழகேசன் (34). இவரும் இவரது நண்பா்தும்பல் சதீஷ் (29), சிதம்பரத்தை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (35), மூவரும் பீமன்பாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக செந்திலகுமாா் என்பவா் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியுள்ளனா். இதில் படுகாயமடைந்த அழகேசன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சதீஷ், கிருஷ்ணமூா்த்தி, செந்தில்குமாா் மூவரும் காயமடைந்தனா். ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (62). தனியாா் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் இவா், புதன்கிழமை காலை பணி முடிந்து வீடு திரும்பியுள்ளாா். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, இவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் அண்ணாமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
அரூா், பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுமையா சாதிக் என்பரின் மகன் ரோஷன் (16). செவ்வாய்க்கிழமை மாலை மின்னாம்பள்ளி செல்லியம்பாளையம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இச்சிறுவன் மீது, எதிரே வந்த டிப்பா் லாரி மோதியதில் படுகாயமடைந்துள்ளாா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இச்சிறுவன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தாா். காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...