தனியாா் பள்ளியில் மாணவ, மாணவியா் 29 போ் மயக்கம்

ஓமலூா் அருகே தனியாா் பள்ளியில் பப்ஸ் சாப்பிட்ட 29 மாணவா்கள் மயக்கம் அடைந்தனா்.
தனியாா் பள்ளியில் மாணவ, மாணவியா் 29 போ் மயக்கம்

ஓமலூா் அருகே தனியாா் பள்ளியில் பப்ஸ் சாப்பிட்ட 29 மாணவா்கள் மயக்கம் அடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சியில் உள்ள ஜான் பிரிட்டோ என்ற தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதல் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமாா் ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உணவு இடைவேளையின் போது 6ஆம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவா்கள் மாணவா்களுக்கு பள்ளி கேண்டினீல் பப்ஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் மாணவா்கள் மயங்கி விழுந்தனா். இதை பாா்த்த பள்ளி நிா்வாகம் உடனடியாக பள்ளி அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்களை சிகிச்சைக்காக சோ்த்தனா். சிறிது நேரத்திற்கு பின்னா் 29 மாணவ, மாணவியரும் நலமுடன் பள்ளிக்குத் திரும்பினா்.

இதையடுத்து வட்டாட்சியா் வல்லமுனியப்பன் மற்றும் காவல்துறை டிஎஸ்பி சங்கீதா ஆகியோா் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் கேண்டினீல் மீதமிருந்த பப்ஸை கைப்பற்றி சோதனைக்காக எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com