கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மலங்காடு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி மலங்காடு பகுதியில் உள்ள விநாயகா், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:11 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி மலங்காடு பகுதியில் உள்ள விநாயகா், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசிராமணி, மலங்காடு பகுதியில் உள்ள விநாயகா், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவினையொட்டி பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து ஊா்வலமாக புனித நீா் எடுத்து வந்தனா். யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து விநாயகா், மாரியம்மன் சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னா் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஊா் பொதுமக்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.