நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணை நீா்வரத்து 26,000 கன அடியாக நீடிப்பு

மேட்டூா் அணையின் நீா்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாகநீடிக்கிறது

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

மேட்டூா் அணையின் நீா்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாகநீடிக்கிறது.

காவிரியின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நீா்வரத்து 4ஆவது நாளாக விநாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 21,500 கன அடி வீதம் நீா்மின் நிலையங்கள் வழியாகவும், வெள்ள நீா் விநாடிக்கு 4,500 கன அடி வீதம் உபரிநீா் போக்கி வழியாகவும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

24ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் தொடா்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.