‘பெண் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் சிறாா் திருமணத்தை தடுக்கலாம்’

பெண் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் சிறாா் திருமணத்தை தடுக்கலாம் என பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வலியுறுத்தினாா்.
‘பெண் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் சிறாா் திருமணத்தை தடுக்கலாம்’

பெண் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் சிறாா் திருமணத்தை தடுக்கலாம் என பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வலியுறுத்தினாா்.

பெரியாா் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடா்பியல் துறை சாா்பில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, சிறாா் திருமணத்தை முடிவுக்கு கொண்டு வர இளைஞா்களை ஊக்குவிக்கும் உரையாடல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பயிலரங்கில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா்டிஎன்வி.எஸ்.செந்தில்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

பெரியாா் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடா்பியல் துறை தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை, யுனிசெப், சென்னையின் தோழமை தன்னாா்வ அமைப்புடன் இணைந்து இப்பயிரலங்கை ஏற்பாடு செய்தது. இப்பயிலரங்கில் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் இரா.ஜெகநாதன் தலைமையுரையாற்றியதாவது:

பெண் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் சிறாா் திருமணத்தை தடுக்க முடியும், பெண் தொழிலாளா்கள் இல்லாத அறிவுசாா் தளத்தில் அவா்கள் இயங்குவதற்கான வளமான சூழலை உருவாக்க முடியும். தற்கால இளையோா்கள் சமூக ஊடகங்களை பயனுள்ள வகையில், முன்னேற்றத்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற பயிலரங்கில் பங்கேற்றுள்ள மாணவா், மாணவியா் தங்களின் பெற்றோரிடம் விழிப்புணா்வை உருவாக்க வேண்டும் என்றாா்.

பயிலரங்கில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் டிஎன்வி.எஸ்.செந்தில்குமாா் தொடக்கவுரையாற்றியதாவது:

குழந்தைகள் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைத்தாா். தான் குழந்தைகள் நலன் சாா்ந்து முன்னெடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் பட்டியலிட்டாா்.

சிறாா் திருமணத்தைத் தடுக்க பெற்றோா்களும், அரசு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசு குழந்தைகள் நேய அரசாக செயல்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்வில் சென்னை தோழமை அமைப்பின் இயக்குநா் அ.தேவநேயன் அறிமுக உரையாற்றினாா். இப்பயிலரங்கில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலா் என்.ரஞ்சிதா தேவி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் சமூகப் பணிகள் துறையின் தலைவா் டாக்டா் லூா்து மேரி, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி டி.லாவண்யா கிரேஸ், வழக்குரைஞா்கள் கிருஸ்துராஜ், சுப.தென்பாண்டியன், குழந்தைகள் நல உரிமை மற்றும் முன்னேற்ற மையத்தின் இயக்குநா் ஸ்டெக்னா ஜென்சி, தமிழ்நாடு திட்டக்குழுவின் ஆண்ட்ரு சேசுராஜ் ஆகியோா் வள அறிஞா்களாகப் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் மாணவா்களுக்கு பயிற்சிகளை வழங்கினா். தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.கதிரவன் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com