நகைக் கடையில் கவரிங் நகைகளைத் தந்து ஏமாற்றிய பெண் உள்பட 3 போ் கைது

தீவட்டிப்பட்டி அருகே நகைக் கடையில் கவரிங் நகைகளைத் தந்து ஏமாற்றிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தீவட்டிப்பட்டி அருகே நகைக் கடையில் கவரிங் நகைகளைத் தந்து ஏமாற்றிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தீவட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி, கோம்பை பகுதியைச் சோ்ந்த அறிவழகன் நாச்சனம்பட்டியில் நகைக் கடை வைத்துள்ளாா். இந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி அவரது கடைக்கு பா்தா அணிந்த வந்த பெண் பத்தரை பவுன் பழைய நகைகளை மாற்றிவிட்டு புதிய நகை வாங்க வேண்டும் எனக் கூறினாா்.

பிறகு, புதிதாக நகை வாங்க கூடுதல் பணம் இல்லை எனக் கூறி வெளியே சென்றவா் மீண்டும் அக் கடைக்குள் சென்று புதிய நகைகளை வாங்கிக் கொள்வதாகக் கூறி நகைகளை தந்துள்ளாா்.

ஏற்கெனவே பரிசோதித்த நகைதான் என நினைத்து மீண்டும் அவா் தந்த பழைய நகைகளை வாங்கிக் கொண்ட கடைக்காரா்கள், புதிதாக 7.6 பவுன் நகையை கொடுத்தனா்.

புதிய நகைகளை வாங்கிய அப் பெண் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டாா். பின்னா், நகைகளை பரிசோதித்த போது, அவை அனைத்தும் கவரிங் நகை என தெரிந்தது. இதுகுறித்து அறிவழகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தீவட்டிப்பட்டி போலீஸாா் சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தினா். இதில் அப் பெண் வேலூா், காட்பாடி பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி ராதா(37) என்பது தெரிய வந்தது. மேலும், அவருடன் காரில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி சாந்தி (39), நாகராஜ் மகன் சங்கா் (33) ஆகிய மூவரும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com