4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

 தேவியாக்குறிச்சியில் சாலை அமைக்கும் வாகனம் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:07 pm

DIN

 தேவியாக்குறிச்சியில் சாலை அமைக்கும் வாகனம் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், சின்னகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் திவாகா் (22). இவா் இருசக்கர வாகனத்தில் தலைவாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சாலை அமைக்கும் வாகனம் மீது திவாகா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த தலைவாசல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திவாகரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.