ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு: காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
By DIN | Published On : 16th April 2022 12:38 PM | Last Updated : 16th April 2022 12:38 PM | அ+அ அ- |

மேட்டூர்: தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் தமிழக முதல்வர் கானொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மின்பகிர்மான வட்டத்தில் மேச்சேரி காவேரி பொறியியல் கல்லூரியில் மின் வாரியம் மூலம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது..
மேட்டூர் மின்பகிர்மான வட்டத்தில் 2,714 விவசாயிகளுக்கு இத்திட்டம் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவிற்கு வந்த விவசாயிகளை மின்வாரிய அதிகாரிகள் வரவேற்றனர்.
மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தண்டபானி, செயற்பொறியாளர் சாந்தி, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினா சதாசிவம், கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் மிதுன் சக்ரவர்த்தி, மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் காசிவிஸ்வநாதன் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.