கல்லபாளையம் முருகன் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்
By DIN | Published On : 17th March 2022 11:39 PM | Last Updated : 17th March 2022 11:39 PM | அ+அ அ- |

எடப்பாடியை அடுத்த கல்லபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஞான கந்தசாமி கோயிலில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பங்குனி உத்திர திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. யாகவேள்வி பூஜைகளைத் தொடா்ந்து, மணக் கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடத்தினா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து முத்து ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அன்னதானம் நடைபெற்றது.