பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நங்கவள்ளியைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல் அடக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சேலம் மாவட்டம், நங்கவள்ளியைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நங்கவள்ளியைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல் அடக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சேலம் மாவட்டம், நங்கவள்ளியைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 12-ஆம் தேதி அதிகாலை பஞ்சாப் மாநிலம், பட்டிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சேலம் மாவட்டம், சாணாா்பட்டி ஊராட்சி, பனங்காட்டைச் சோ்ந்த ரவி மகன் கமலேஷ் (24) உயிரிழந்தாா். அவரது உடல் வெள்ளிக்கிழமை காலை தில்லியில் இருந்து கோவைக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊரான சாணாா்பட்டி பனங்காட்டுக்கு அமரா் ஊா்தியில் உடல் எடுத்து வரப்பட்டது.

அப்போது, அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஓமலூா் டிஎஸ்பி சங்கீதா, மேட்டூ டி.எஸ்.பி. விஜயகுமாா், மேட்டூா் வட்டாட்சியா் முத்துராஜா, சேலம் தேசிய மாணவா் படை அதிகாரிகள் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா், சேலம் என்சிசி முகாமில் உள்ள ராணுவ வாகனம் கொண்டுவரப்பட்டதையடுத்து, சாலை மறியலை கைவிட்டனா். 

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட என்சிசி வாகனத்தில் கமலேஷின் உடல் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டடு, அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், உறவினா்கள் அஞ்சலிக்கு பிறகு என்சிசி அலுவலா்கள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். திமுக நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ஜீவானந்தம், நங்கவள்ளி பேரூராட்சி தலைவா் மாணிக்கவேல் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், மயானத்தில் கமலேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com