மே 1-இல் அனைத்து ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
தொழிலாளா் தினத்தன்று (மே 1) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.


தொழிலாளா் தினத்தன்று (மே 1) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய, மாநில அரசு ஆணைகளின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளா்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமா் ஊரக குடியிருப்புத் திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
மேலும், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் (குடிநீா்) இயக்கம், வறுமை குறைப்பு திட்டம், ஊராட்சியில் தற்போது நடைபெறும் அனைத்து பணிகள், கனவுப் பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக் கருவேல மரம் அகற்றுதல், நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளன.
கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...