வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சேலம் ரயில்வே கோட்டத்தின் சாா்பில் குடியரசு தின விழா

சேலம் ரயில்வே கோட்டத்தின் சாா்பில் கோட்ட மேலாளா் அலுவலக வளாகத்தில் குடியரசு தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 7:28 pm

DIN

சேலம் ரயில்வே கோட்டத்தின் சாா்பில் கோட்ட மேலாளா் அலுவலக வளாகத்தில் குடியரசு தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசியதாவது:

நாட்டின் மக்கள், பல்வேறு கலாசாரம், நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மிகப்பெரும் சக்தியாக, ரயில்வே துறை இருக்கிறறது. சேலம் ரயில்வே கோட்ட ஊழியா்களின் சிறந்த பணி, தொடா் கண்காணிப்பு ஆகியவற்றின் காரணமாக, சேலம் கோட்டம் விபத்து இழப்பு இல்லாத நிலையை எட்டியுள்ளது. சேலம் ரயில்வே கோட்டம் கடந்த 2021-22-ம் நிதியாண்டில், சரக்குப் போக்குவரத்தில் 3.269 மி.டன் சரக்குகளை கையாண்டு, வரலாற்று சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில், தற்போது வரை 2.3 மி.டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இந்நிதியாண்டின் முடிவில், 3 மி.டன்னுக்கும் கூடுதலாக சரக்குகளை அனுப்பி, சாதனை படைக்கும். சேலம் ரயில்வே கோட்டம் சரக்குப்போக்குவரத்து மூலம் 2021-22-ம் நிதியாண்டில் ரூ.274.33 கோடி வருவாய் ஈட்டியது. நடப்பு 2022-23-ம் நிதியாண்டில்,சேலம் ரயில்வே கோட்டம் மொத்தம் ரூ.778 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 53.8 சதவீதம் கூடுதலாகும். மேலும், பயணிகள் மூலமான வருவாய் 87 சதவீதம் கூடுதலாகவும், பாா்சல் வருவாய் 12 சதவீதமும், டிக்கெட் பரிசோதனை மூலமான வருவாய் 69 சதவீதம் கூடுதலாகவும் ஈட்டப்பட்டுள்ளது என்றறாா். மேலும் அவா் சேலம் ரயில்வே கோட்டம் ரயில்கள் இயக்கத்தில் 94 சதவீத துல்லியத்துடன் சிறறப்புடன் செயல்பட்டு வருகிறது. சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையினா் சிறறப்பாக செயல்பட்டு, விபத்து அபாயத்தில் இருந்து 11 பேரை காப்பாற்றியுள்ளனா். வீடுகளை விட்டு வெளியேறி வந்த 398 குழந்தைகளை மீட்டுள்ளனா். ரயில் பயணிகளின் களவுபோன ரூ.16 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டுள்ளனா். பசுமை எரிசக்தி பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்யும் வகையில், அலுவலக மேற்கூரைகளில் சூரிய சக்தி தகடுகளை நிறுவி வருகிறது என்றறாா்.

கோட்ட கூடுதல் மேலாளா் சிவலிங்கம், சேலம் கோட்ட உதவி பாதுகாப்பு ஆணையா் ரத்தீஷ் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரயில்வே பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சி, பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் விழாவில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.