சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது!

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 39 ஆயிரத்து 273 மாணவ மாணவிகள் 156 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது!

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 39 ஆயிரத்து 273 மாணவ மாணவிகள் 156 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கியது. முறைகேடுகளைத் தடுக்க தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 325 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 18,830 மாணவர்கள், 20.443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களுடன், 250 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் எழுதுகின்றனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 156 மையங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 7 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்வு விடைத்தாள்கள் ஏற்கனவே பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாணவர்களின் விவரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள் தைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டன

இதேபோல், வினாத்தாள்கள் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் உள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது.

இந்த தேர்வுக்காக 70 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 71 வழித்தட அலுவலர்கள், 344 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 344 துறை அலுவலர்கள், 5,859 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 844 சொல்வதை கேட்டு எழுதுபவர்கள், 490 நிலையான படையினர், 579 ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என மொத்தம் 8,601 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு திங்கள்கிழமை காலை சரியாக 10 மணிக்கு தொடங்கியது.

சேலம் கோட்டை மாநாட்சி மேல்நிலைப்பள்ளியில் நல்ல முறையில் தேர்வு எழுதும் வகையில் மாணவிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், தேர்வு எழுதுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர்கள் விளக்கினர். 

சிரமமின்றி தேர்வு எழுத போதிய வசதிகள் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்து அறிவிப்புகள் பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தவிர வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை. பள்ளியின் முன்பு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொது தேர்வு நடைபெறுகிறுவதையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆங்காங்கே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com