பால் மற்றும் பால் சாா்ந்த பொருட்களுக்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தனியாா் நிறுவனங்கள் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால், ஆவின் கூட்டுறவு நிறுவனம் விவசாயிகளுக்கு குறைந்த விலை கொடுத்து ஏமாற்றி வருகிறது. தமிழகம் முழுவதும் 9,000 பால் கூட்டுறவு சங்க விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். எனவே, பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, தமிழக அரசு பால் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்திக் கொடுத்து பால் உற்பத்தியாளா், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றாா்.