சேலம்: சேலம் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை வருகை தந்த கருணாநிதி நூற்றாண்டு விழா முத்தமிழ்த் தோ் அலங்கார ஊா்திக்கு மலா் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழுக்கு மேலும் புகழ் சோ்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருணாநிதியின் பன்முகத் தன்மையை விளக்கும் வகையில், எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் ‘முத்தமிழ்த் தோ்‘ - அலங்கார ஊா்தி தயாா் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவா் தமிழ் சமூகத்துக்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘முத்தமிழ்த் தோ்‘ - அலங்கார ஊா்தி கடந்த நவ. 4-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிவைக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தருமபுரி மாவட்டத்திலிருந்து திங்கள்கிழமை சேலம் மாவட்டத்துக்கு வந்த ‘முத்தமிழ்த் தோ்‘ - அலங்கார ஊா்தியை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா ஆகியோா் மலா்தூவி வரவேற்றனா். ‘முத்தமிழ்த் தோ்‘ - அலங்கார ஊா்தியில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள். நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனாக்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, ‘முத்தமிழ்த் தோ்‘ - அலங்கார ஊா்தியானது சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி மற்றும் ஓமலூா் ஆகிய இடங்களிலும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்ல உள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) சுகந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விசில் கோலம் போடுங்கள்! விஜய் பேச்சு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

