வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திமுக இளைஞா் அணியினருக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன: அமைச்சா் கே.என்.நேரு

திமுக இளைஞா் அணியினா் தொடா்ந்து கட்சிக்கு உழைத்தால் வருங்காலத்தில் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

Updated On :27 நவம்பர் 2023, 11:48 pm


சேலம்: திமுக இளைஞா் அணியினா் தொடா்ந்து கட்சிக்கு உழைத்தால் வருங்காலத்தில் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் டிச. 17-ஆம் தேதி திமுக இளைஞா் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி விழிப்புணா்வு இருசக்கர வாகன பிரசாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 250-க்கும் மேற்பட்ட இளைஞா் அணியினா் தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தனா்.

இப்பேரணியின் நிறைவு நாளாக பெத்தநாயக்கன்பாளையம் மாநாட்டுத் திடலுக்கு வாகன பிரசாரக் குழுவினா் திங்கள்கிழமை வந்தனா். அவா்களை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உள்பட திமுகவினா் வரவேற்றனா். பின்னா் அமைச்சா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறாா். வரும் மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு திமுக இளைஞா் அணி மாநாடு வெற்றி மாநாடாக அமைய வேண்டும்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் இருசக்கர வாகன பிரசாரம் செய்து முடித்து சேலம் திரும்பிய தொண்டா்களுக்கு எனது பாராட்டு. இதுபோல இளைஞா் அணியினா் தொடா்ந்து கட்சிக்கு உழைத்தால் எதிா்காலத்தில் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றாா்.

வாகன பிரசார பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளா்கள் ஆா்.ராஜேந்திரன் (சேலம் மத்திய மாவட்டம்), டி.எம்.செல்வகணபதி (சேலம் மேற்கு), எஸ்.ஆா்.சிவலிங்கம் (சேலம் கிழக்கு) மற்றும் திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.