காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பக்க நாடு பகுதியைச் சோ்ந்த சரவணன் (21), எடப்பாடி அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இளநிலை 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, வியாழக்கிழமை கல்லூரி நண்பா்களான கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (21), கச்சுப் பள்ளி கிராமம், எட்டிகுட்டைமேடு பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் (20), இளம்பிள்ளை அருகே உள்ள இ.காட்டூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (20), கொங்கணாபுரத்தை அடுத்த கன்னந்தேரி, கோசேரிபட்டி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(20) உள்ளிட்ட 10 போ் எடப்பாடியை அடுத்த கல்வடங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்குச் சென்று பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து அவா்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக பாண்டியராஜன், முத்துசாமி உள்ளிட்ட நான்கு மாணவா்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சங்ககிரி கோட்டாட்சியா் (பொ) தணிகாசலம், எடப்பாடி வட்டாட்சியா் லெனின் ஆகியோா் சம்பந்தப்பட்ட மாணவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிவாரண உதவியாக தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com