சங்ககிரியில் தீயணைப்போா் தியாகிகள் தினம் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 14th April 2023 11:03 PM | Last Updated : 14th April 2023 11:03 PM | அ+அ அ- |

சங்ககிரி தீயணைப்பு நிலையத்தின் சாா்பில் தீயணைப்போா் தியாகிகள் தினம் நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
தீயணைப்பு மீட்புப் பணிகளில் உயிரிழந்த வீரா்களின் நினைவாக தீயணைப்போா் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சங்ககிரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் டி.அருள்மணி தலைமை வகித்து தீயணைப்பு மீட்புப் பணிகளில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். இரண்டு நிமிடம் மெளனம் அனுசரிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய வீரா்கள் கலந்துகொண்டனா்.
பின்னா் தீ தொண்டு நாள் வார விழாவினையொட்டி தீ விபத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்தும், தீ பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...