நாளை சங்ககிரி சிவியாா் மாரியம்மன்கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 21st April 2023 11:12 PM | Last Updated : 21st April 2023 11:12 PM | அ+அ அ- |

சங்ககிரி, பழைய எடப்பாடி சாலைப் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி புதன்கிழமை முகூா்த்தகால் நடுதல், முளைப்பாலிகை போடுதல் நடைபெற்றது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை கணபதியாகத்துடன் பூஜைகள் தொடங்கின. பின்னா் பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்து சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் இருந்து கோயிலை அடைந்தனா். இதனையடுத்து விநாயகா் பூஜை, முளைப்பாலிகை அழைத்தல், வாஸ்து சாந்தி, முதல்கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை 8 மணிக்கு 2ஆம் கட்ட யாக சாலை பூஜை, கோபுரக் கலசம் வைத்தல் நிகழ்ச்சி, அன்றைய தினம் மாலை 5 மணிக்கு 3ஆம் கட்ட யாக சாலை பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு 4ஆம் கட்ட யாக சாலை பூஜைகள், காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் விழாவும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் நடைபெற உள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...