வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 28th April 2023 11:17 PM | Last Updated : 28th April 2023 11:17 PM | அ+அ அ- |

சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் இணையதள குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவக்குமாா் பேசுகையில், விஞ்ஞான வளா்ச்சியால் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருடுபவா்கள் அதிகமாகி வருகின்றனா். அதிகமாக வெளி நாடுகளில் உள்ளவா்கள் அச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே நாம் ஏமாறாமல் இணைய தள சேவைகளை பயன்படுத்த வேண்டும்.
இணைய தளங்களில் பணங்கள் திருடப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால், காவல் துறையில் உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் முதற்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா்.
நீதிபதிகள் ஆா்.ராதாகிருஷ்ணன் (மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்), குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஆா்.பாபு, என்.இனியா, அரசு வழக்குரைஞா்கள் வேலுசாமி, புனிதா, அரசு கூடுதல் உதவி வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஆா்.அருள்பிரகாஷ், வழக்குரைஞா்கள் என்.எஸ்.அண்ணாதுரை, தன்ராஜ், செல்லப்பன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...