மேட்டூரில் முதன்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி 

மேட்டூரில் முதன்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. 
மேட்டூரில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டி.
மேட்டூரில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டி.

மேட்டூரில் முதன்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

மேட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேட்டூர் ரோட்டரி சங்கம் சார்பில் காவிரியை காப்போம் என்ற தலைப்பில் நடந்த சர்வதேச மாரத்தான் போட்டியை சர்வதேச தடகள வீராங்கனை பவித்ரா, உலக ஆணழகன் அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கர் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேட்டூர் ரோட்டரி சங்கம்  நடத்திய இப்போட்டியில்  சர்வதேச மாரத்தான் போட்டியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இரண்டு வயது முதல் 85 வயது வரையிலான சுமார் 3,750 பேர் கலந்து கொண்டனர். இதில் இரண்டு கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரையிலான மாரத்தான் போட்டியில் பங்கு பெற்றனர். 

இதில் 38 மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வீல் சேர் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியை தடகள வீராங்கனை பவித்ரா வெங்கடேஷ்,  தமிழகத்தைச் சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற உலக ஆணழகன் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேட்டூரில் முதன்முதலாக  நடைபெறும் முதல் சர்வதேச மாரத்தான் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. 

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதங்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் அவினாசி மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com