நாட்டின் முதல் ஹைபிரிட் ராக்கெட் ஏவப்பட்டது

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறியரக செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது. 
நாட்டின் முதல் ஹைபிரிட் ராக்கெட் ஏவப்பட்டது

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறியரக செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது. 

செங்கல்பட்டு மாவட்டம், பட்டிப்புலம் கிராமத்தில் இருந்து ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக பார்வையிட்டனர். 

விண்ணில் ஏவப்பட்ட மறு பயன்பாட்டு ராக்கெட் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் வானிலை, வளிமண்டல நிலை கதிர்வீச்சு தன்மை குறித்த ஆராய்ச்சி தகவலை பெறலாம்.

நாடு முழுவதும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 3,500 மாவணர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com