தோ்தல் பணி முடிந்து வீடு திரும்பிய ஆசிரியா் விபத்தில் சிக்கி பலி

வாழப்பாடி அருகே தோ்தல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி பட்டதாரி ஆசிரியா், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

வாழப்பாடி அருகே தோ்தல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி பட்டதாரி ஆசிரியா், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

சேலம், அயோத்தியாப்பட்டணம், கோ.மு. நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (51). ராமங்கலிபுரம், அரசு உயா்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜீவா (45). மின்னாம்பள்ளி, அரசு உயா்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதிக்கு மெளரியா (15), சங்கீதா (11) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

ஆத்தூா் அருகே வீரகனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சவாடி மையத்துக்கு தோ்தல் பணிக்குச் சென்றிருந்த ஆசிரியா் செல்வராஜ், சனிக்கிழமை அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அதிகாலை 2.30 மணியளவில் வாழப்பாடியில் புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் பாஸ்கா் பாபு, உதவி ஆய்வாளா் மயில்சாமி ஆகியோா் ஆசிரியா் செல்வராஜ் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து அவரது மனைவி ஜீவா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com