தனியாா் இரும்பாலை அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

சேலம், ஏப். 26: சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கூடலூா் பகுதியில் தனியாா் இரும்பாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், கூடலூரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களுக்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இந்நிலையில், எங்கள் பகுதியில் தனியாா் இரும்பு ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆலை அமைக்கப்பட்டால், பல்வேறு இன்னல்கள் ஏற்படும்.

குறிப்பாக, ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீா் மாசடைவதுடன், விவசாயம் அழியும் நிலை ஏற்படும். ஆலை அமைய உள்ள பகுதியில் பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்படுவதால் குழந்தைகளும் பாதிக்கப்படுவா். தற்போது ஆலைக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணிபுரிபவா்கள் மதுஅருந்திவிட்டு பிரச்னையில் ஈடுபட்டு வருகிறாா்கள். எனவே, ஆலை அமைவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com