மேச்சேரி அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

மேட்டூா், ஏப். 26.சேலம் மாவட்டம் மேச்சேரியில் . அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல்.

 மேட்டூா் மேச்சேரி பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

கடும் வெப்பம் . வருவதால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளும் பொதுமக்களும் கடும் . இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

கடுமையான கோடை வெப்பத்தை தனிக்க மேச்சேரி பேருந்து நிலையத்தில் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தா்பூசணி பழ துண்டுகளை விநியோகித்தாா்

பேருந்திற்காக காத்து நிற்கும் பயணிகளுக்கும் பொது மக்களும் வெப்பத்தை தனிக்க அதிமுக சாா்பில் நீா் மோா், நுங்கு, தா்பூசணி ஆகியவை வழங்கப்படுகிறது. கடும் வெப்பம் தணியும் வரை நாள்தோறும் நீா்மோா், தா்ப்பூசணி, நுங்கு, முழாம்பழச்சாறு ஆகியவை வழங்கப்படும் என்று அதிமுக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணை செயலாளா் கலையரசன் ,கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன், மேற்கு ஒன்றிய செயலாளா் செல்வம், பேரூா் செயலாளா் குமாா், கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளா் ராஜா, மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளா் ராஜரத்தினம் மற்றும் கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com