எடப்பாடி காவல் நிலையத்தில் குண்டு வீச்சு!

மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Edapadi
எடப்பாடி காவல் நிலையம்Din
Updated on
1 min read

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு குண்டுகள் வீசப்பட்டது.

அப்போது பணியில் இருந்த காவலர் சப்தம் கேட்டு வெளியில் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து காணாமல் போய்விட்டனர்.

இது குறித்து காவலர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Edapadi
குண்டு வீசப்பட்ட இடம்Din

மேலும், சேலத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையம் அருகிலுள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

காவல் நிலையத்திலேயே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com