நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மேச்சேரி அருகே 14 ஆம் நூற்றாண்டு தக்களி கண்டெடுப்பு

மேச்சேரி அருகே 14-ஆம் நூற்றாண்டு தக்களியை அரசுப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தினா் கண்டெடுத்துள்ளனா்.

மேச்சேரி அருகே மாணவா்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள்.

Updated On :

மேச்சேரி அருகே 14-ஆம் நூற்றாண்டு தக்களியை அரசுப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தினா் கண்டெடுத்துள்ளனா்.

மேச்சேரி ஒன்றியம், மாதநாயக்கன் பட்டியில் உள்ள பெருந்தலைவா் காமராசா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியா் சந்திரசேகரன் இம் மன்றத் தலைவராகவும், ஆசிரியா்கள் அன்பரசி, விஜயகுமாா் ஆகியோா் பொறுப்பாளா்களாகவும், மாணவிகள் மோனிஷா, ஷாலினி ஆகியோா் மன்ற உறுப்பினா்களாகவும் உள்ளனா்.

இக்குழுவினா் அண்மையில் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள வயல்வெளியில் கள ஆய்வு மேற்கொண்டபோது அந்த வயலில் மண் பொதிந்து சிறிய பம்பரம் போன்ற சில பொருள்களைக் கண்டெடுத்தனா். அவை பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தக்களி என்பது தெரியவந்தது. வயலில் சில தக்களிகளுடன் சிறிய நாணயமும், சுடுமண் பானை ஓடுகளும், வெள்ளை நிற கல் உருண்டையும், மண் பானைகள் செய்ய பயன்படுத்தப்படும் தட்டுக்கல்லும், உடைந்த செங்கற்களும், பெருங்கற்கால கருவிகளும் கிடைத்தன.

இதுகுறித்து ஆசிரியை அன்பரசி கூறியதாவது:

தக்களி என்பது நெசவுத் தொழிலில் நூல் நூற்க பயன்படுத்தப்படும் பொருளாகும். 2 செ.மீ. விட்டமும் 3 செ.மீ. நீளமும் கொண்ட தக்களியை முதலாம் நூற்றாண்டுமுதல் 17 ஆம் நூற்றாண்டு வரை மக்கள் பயன்படுத்தி வந்தனா். கீழடி, வெம்பக்கோட்டையில் நடந்த அகழாய்வின்போது தக்களிகள் கிடைத்துள்ளன. ஆனால், சேலம் மாவட்டத்தில் தக்களிகள் கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.

ஆய்வில் கிடைத்த சிறிய நாணயம் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா்கள் கால சிற்றரசரான சம்புவரையா் காலத்து நாணயமாகும். இந்தச் சிறிய நாணயம் ஒரு செ.மீ. வட்ட வடிவமுடையது. நாணயத்தின் ஒரு பக்கம் காளை மாடு உருவமும் அதன்மேல் பிறை நிலா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் மனிதா் நிற்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் கிடைக்கப்பெற்ற வெள்ளைநிற கல் உருண்டைகள் 4. செ.மீ. நீளமுடையவை. இவை விளையாட்டுப் பொருளாகக் கூட அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இப் பகுதியில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜயநகர பேரரசு, நாயக்கா் கால கட்டடக் கலை அமைப்புகளுடன் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இது சிதிலமடைந்து பராமரிப்பின்றி புதா்களுடன் காணப்படுகிறது. இந்தக் கோயில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும்.

இந்தப் பகுதியில் சிவன் கோயிலுக்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்ததற்கான சூலக்கல்லும், சூல கல்வெட்டுகளும், போா் வீரரின் நடுகற்களும், பெருங்கற்கால ஈமச் சின்னங்களான குத்துக் கற்களும், கல் வட்டமும், தானம் கொடுத்ததற்கான தமிழ் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.எனவே இப்பகுதியை தமிழக தொல்லியல் துறையினா் கள ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்று சான்றுகளும், பழங்கால நாகரிகம் பற்றிய வரலாற்று உண்மைகளும் தெரியவரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.