நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

18ஆம் நூற்றாண்டு வரைபடங்களில் கடல் கோள், நிலவியல் மாற்றங்களுக்கான ஆதாரங்கள்: ஆய்வாளா் தகவல்

மன்னாா் வளைகுடா மற்றும் சோழ கடற்கரைப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கடல் கோள், ஆழிப் பேரலை மற்றும் நிலவியல் மாற்றங்களுக்கான ஆதாரங்கள் 18ஆம் நூற்றாண்டு வரலாற்று வரைபடங்களில் இடம்பெற்றுள்ளதாக தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளா் பெ. ராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளாா்.

வரலாற்று ஆய்வாளா் பெ. ராஜேஷ் செல்வரதி - Express

Updated On :

மன்னாா் வளைகுடா மற்றும் சோழ கடற்கரைப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கடல் கோள், ஆழிப் பேரலை மற்றும் நிலவியல் மாற்றங்களுக்கான ஆதாரங்கள் 18ஆம் நூற்றாண்டு வரலாற்று வரைபடங்களில் இடம்பெற்றுள்ளதாக தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளா் பெ. ராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமைப் பொறியாளா் ஜான் கால் தொகுத்து, ராபா்ட் ஓா்ம் 1778ஆம் ஆண்டு வெளியிட்ட வரைபடத்தில் கீழக்கரை, பட்டினமருதூா்-தருவைக்குளம், காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் இயற்கையான பாதுகாக்கப்பட்ட வளைகுடாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால், 1863ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கடல் வரைபடத்தில் இவை காணப்படவில்லை. இதன் மூலம் 1778 முதல் 1863 வரையிலான காலகட்டத்தில் கடற்கரை நில அமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

மேலும், கி.பி. 822-இல் நிகழ்ந்த கடல் கோளால் பன்னிரு நிலங்கள் கடலுக்குள் மூழ்கியதற்கு, பட்டினமருதூா், பனையூா் உள்ளிட்ட பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பழைமையான கட்டமைப்புகள் மற்றும் கடல்சாா் படிமங்கள் ஆதாரங்களாக இருக்கின்றன.

எனவே, லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள ராபா்ட் ஓா்ம் வரைபடங்களின் மூல ஆவணங்களை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்திய புவியியல் ஆய்வு மையம் இணைந்து தூத்துக்குடி, மன்னாா் வளைகுடா, ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் கடலடி அகழாய்வு மற்றும் நவீன தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு பழந்தமிழா் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.